Ingredients
- 1/2 cup பனிவரகு மாவு
- 1/2 cup ரவை
- 1/2 cup சோடா நீர் (soda water)
- 1/4 cup கோதுமை மாவு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு உப்பு
Servings:
Instructions
- ரவையுடன் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு ரவையைத் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுக்கவும்.
- அதனுடன் கோதுமை மாவு, பனிவரகு மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, சோடா வாட்டரை ஊற்றிக் கலக்கவும். அதனுடன் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுப் பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, மாவை எடுத்துப் பிசைந்து, சிறிதளவு கோதுமை மாவைத் தடவி பெரிய வட்டங்களாகத் திரட்டிவைத்துக் கொள்ளவும்.
- திரட்டியவற்றில் சிறிய வட்டமான மூடியால் மினி பூரிகளாக அழுத்தி எடுக்கவும். மீதமுள்ள மாவையும் இதேபோல வட்டவடிவில் செய்துகொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பனிவரகு மினி பூரி தயார்.
- இதை, உருளைக்கிழங்கு மசாலா அல்லது தக்காளித் தொக்குடன் பரிமாறவும். இரண்டு நாள்களுக்கு இந்த பூரி நன்றாக இருக்கும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து ஃப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.