பனீர் முளைப்பயறு சமோசா

Paneer Moongdal Samosa
பனீர் முளைப்பயறு சமோசா
Print Recipe
Servings Prep Time
2 30
Cook Time
50
Servings Prep Time
2 30
Cook Time
50
Paneer Moongdal Samosa
பனீர் முளைப்பயறு சமோசா
Print Recipe
Servings Prep Time
2 30
Cook Time
50
Servings Prep Time
2 30
Cook Time
50
Ingredients
Servings:
Instructions
  1. அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாகத் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கலந்து 5 நிமிடங்கள் அழுத்தி பிசைந்து 20 நிமிடங்கள் மூடிவைக்கவும். பனீரை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் மற்றும் கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முளைகட்டிய பச்சைப் பயற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.
  3. வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு, சூடானதும் சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும், கேரட்டைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு வேகவைத்த பச்சைப் பயறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனுடன் கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு உதிர்த்த பனீர், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். கலவை ஆறியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவோடு இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர்விட்டு கலந்து கொள்ளவும்.
  5. முன்பே பிசைந்து வைத்திருக்கும் மைதா - கோதுமை மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை மெல்லிய சப்பாத்திகளாகச் செய்து, பின்பு சதுரமாக வெட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு சதுரத்தின் மேல் சிறிதளவு மாவைத் தூவிவைக்கவும். நான்கு சப்பாத்திகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிவைக்கவும்.
  6. இப்போது அடுக்கிய சப்பாத்திகளை சூடான தோசைக்கல்லில் ஒரு நிமிடம் வரை இரண்டு பக்கங்களிலும் லேசாக வாட்டி எடுக்கவும். பின்பு மெதுவாக ஒவ்வொரு சதுரமாக பிரித்துக் கொள்ளவும். பிரித்த ஒவ்வொரு சதுரத்தையும் மீண்டும் முக்கோண வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். முக்கோணத்தைச் சுற்றி கரைத்துவைத்திருக்கும் மைதா பேஸ்ட்டைத் தடவிக் கொள்ளவும்.
  7. ஒவ்வொரு முக்கோணத்தையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே பனீர் - முளைப்பயறு கலவையை நிரப்பி ஓரங்களை மடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி மிதமான சூட்டில் சமோசாக்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
Recipe Notes

இதற்குப் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் வைத்துப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *