பனீர் கோஃப்தா பிரியாணி

paneer kofta biryani
பனீர் கோஃப்தா பிரியாணி
Print Recipe
Servings Prep Time
2 20
Cook Time
30
Servings Prep Time
2 20
Cook Time
30
paneer kofta biryani
பனீர் கோஃப்தா பிரியாணி
Print Recipe
Servings Prep Time
2 20
Cook Time
30
Servings Prep Time
2 20
Cook Time
30
Ingredients
கொத்தமல்லி இலை, புதினா இலை - தலா அரை கப்
நெய், எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்
பனீர் கோஃப்தாவுக்கு:
புதினா இலை, கொத்தமல்லி இலை, உப்பு - சிறிதளவு
Servings:
Instructions
  1. முதலில் பாஸ்மதி அரிசியை இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். அகலமான தட்டில் பனீரை கைகளால் நன்கு உதிர்த்துக் கொள்ளவும். அதில் பொட்டுக்கடலை மாவு, கொத்தமல்லி இலை, புதினா இலை, இஞ்சி - பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து மெதுவாகப் பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில்வைத்து, பனீர் உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
  2. கனமான கடாயில் நெய் மற்றும் எண்ணெய்விட்டு சூடாக்கி பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். வாசனை நன்கு வந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் புதினா இலை, கொத்தமல்லி இலை, பச்சைப் பட்டாணி மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  3. தக்காளி லேசாக வதங்கியதும் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் 6 கப் வெந்நீரைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் எலுமிச்சைச்சாறு, தேவையான அளவு உப்பு மற்றும் ஊறவைத்த அரிசி சேர்த்து குறைந்த தீயில் 20 நிமிடங்கள் மூடிபோட்டு வேகவிடவும். சாதம் வேகும் இடைவெளியில் குங்குமப்பூவைச் சிறிது பாலில் கலந்து வைக்கவும்.
  4. அரிசி முக்கால் பாகம் வெந்ததும் பாலில் கலந்த குங்குமப்பூ மற்றும் பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, சிறிதளவு நெய்விட்டுக் கிளறவும். பனீர் கோஃப்தா பிரியாணி ரெடி.
Recipe Notes

இதற்குத் தயிர்ப் பச்சடி அல்லது சால்னா பொருத்தமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *