மட்டன் கீமா ஆப்பம்

மட்டன் கீமா ஆப்பம்
மட்டன் கீமா ஆப்பம்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
மட்டன் கீமா ஆப்பம்
மட்டன் கீமா ஆப்பம்
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
15 mins
Instructions
  1. பச்சரிசியைக் கழுவி இறுத்து, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மீண்டும் தண்ணீரை இறுத்து, ஒரு தட்டில் வைத்து மின்விசிறியின் கீழ் காயவிடுங்கள்.
  2. லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் அரைத்து, சல்லடையில் நன்கு சலித்துக் கொள்ளுங்கள். இனி, தேங்காயைத் துருவி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரே ஒரு முறை மட்டும் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. இந்தப் பாலை அரைத்த மாவுடன் சேர்த்துக் கலந்து, கூடவே ஒரு கப் தயிரையும் சேர்த்து, கரண்டியால் நன்கு கலந்து, இறுதியாக உப்புச் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். முதல் நாள் மாலையில் இதனை தயாரித்து ஒரு சட்டியில் வைத்து மூடி, மறுநாள் எடுத்து உபயோகிக்க வேண்டும்.
  4. மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இனி, வாணலியில் எண்ணெய் விட்டு, மட்டனை பொரித்து, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  5. அடுப்பை சூடாக்கி, ஆப்ப சட்டியை வைத்து துளி எண்ணெய் விட்டு சட்டி முழுவதும் துணி கொண்டு தேய்த்து விடுங்கள்.
  6. இனி, சட்டியில் ஆப்ப மாவை ஊற்றி மிதமான தீயில் இரண்டு நிமிடம் மூடி போட்டு வேகவிட வேண்டும். பிறகு, முட்டையை உடைத்து ஊற்றி சட்டியை ஒரு சுழற்று சுழற்றி, பொரித்த மட்டனை பரவலாகத் தூவி மூடி போட்டு, மேலும் இரண்டு நிமிடம் வேக வைத்து எடுத்தால், மட்டன் கீமா ஆப்பம் ரெடி. நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி பரிமாறவும்.
Recipe Notes

மட்டன் கிரேவி இதற்கு பொருத்தமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *