மரவள்ளிக்கிழங்கு போண்டா

maravalli kizhangu bonda
மரவள்ளிக்கிழங்கு போண்டா
Print Recipe
Servings Prep Time
2 1hr
Cook Time
35
Servings Prep Time
2 1hr
Cook Time
35
maravalli kizhangu bonda
மரவள்ளிக்கிழங்கு போண்டா
Print Recipe
Servings Prep Time
2 1hr
Cook Time
35
Servings Prep Time
2 1hr
Cook Time
35
Instructions
  1. மரவள்ளிக்கிழங்கை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தோலை சீவி நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் ஐந்து கப் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய கிழங்குகளைப் போட்டு நன்கு வேகவிடவும். வெந்ததும் ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் ஒரு கப் தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கரைத்து, இட்லி மாவு பதத்துக்குக் கலந்து கொள்ளவும். இப்போது ஆறவைத்த மரவள்ளிக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மசித்த மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு புரட்டி இறக்கவும். பின்னர் இவற்றைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  4. வாணலியில் எண்ணெய்விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து காயவைக்கவும். மரவள்ளிக்கிழங்கு உருண்டைகளைக் கடலை மாவுக் கலவையில் நன்கு இருபுறமும் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
Recipe Notes

போண்டாக்களை விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *