Ingredients
- 1 cup கேழ்வரகு மாவு, அரிசி மாவு
- 1/2 cup கடலைப்பருப்பு, துவரம்பருப்பு
- 1 வெங்காயம் (பொடியாக நறுக்கவும்)
- 2 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்)
- 2 கைப்பிடியளவு நறுக்கிய அரைக்கீரை
- தேவையான அளவு எண்ணெய், உப்பு
தாளிக்க:
- 1/2 tsp கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்
- சிறிதளவு கறிவேப்பிலை
- ஒரு இன்ச் துண்டு (பொடியாக நறுக்கவும்) தோல் சீவிய இஞ்சி
Servings:
Instructions
- கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஊறவைத்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அரிசி மாவுடன் கேழ்வரகு மாவு, அரைத்த பருப்புக் கலவை, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.
- அதனுடன் கீரை சேர்த்து மாவுடன் கலக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்துக்குக் கெட்டியாகக் கரைக்கவும்.
- தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை அடைகளாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய்விட்டு வேகவைத்து எடுக்கவும்.
Recipe Notes
அரிசி மாவுக்குப் பதிலாக இட்லி மாவு சேர்த்தும் அடை செய்யலாம்.